வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் – சென்னை வானிலை மையம்

237

வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் பேசுகையில், தென்மேற்கு பருவமழையால் கோவை, நீலகிரி மாவட்டங்களில் பெய்து வருகிறது என்றார். ஆனால், கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், நேற்று மாலை திடீரென மழை பெய்ததாக அவர் சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக சென்னையில் சற்று வெப்பம் தணிந்து காணப்பட்டதாக பாலச்சந்திரன் கூறினார்.

வெப்ப சலனம் காரணமாக இன்னும் 3 நாட்களுக்கு மாலையில் மழை பெய்யும் என்றும், இந்த மழை தென்மேற்கு பருவ மழை இல்லை என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். காற்றின் வேகம் கடலில் வழக்கத்தை விட சற்று அதிகமாக இருக்கும் என்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார்.