பார்சிலோனா கால்பந்து அணிக்காக மெஸ்சி 38 முறை ஹாட்ரிக் அடித்து புதிய சாதனை!

207

பார்சிலோனா கால்பந்து அணிக்காக மெஸ்சி 38 முறை ஹாட்ரிக் அடித்து புதிய சாதனைப் படைத்துள்ளார்.
லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா – எஸ்பான்யல் அணிகள் மோதின. இதில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சி அபாரமாக விளையாடினார். ஆட்டத்தின் 26, 35 மற்றும் 67வது நிமிடங்களில் அடுத்தடுத்து மூன்று கோல்கள் அடித்தார். இதன்மூலம் பார்சிலோனா அணிக்காக மெஸ்சி 38 முறை ஹாட்ரிக் கோல்கள் அடித்து புதிய சாதனைப் படைத்துள்ளார்.
இந்தப் போட்டியில் பார்சிலோனா அணி 5க்கு 0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது.