அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சிக்கு 3 போட்டிகளில் விளையாட தடை..!

786

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்சிக்கு மூன்று சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் பிரேசில் அணிக்கு ஆதரவாக அர்ஜென்டினா நிர்வாகம் செயல்பட்டதாக ஊழல் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜூலை 6-ல் நடந்த மூன்றாவது இடத்திற்கான பிளே ஆப் போட்டியில் சிலி வீரர் கேரி மெடலுடனான மோதல் போக்கிற்காக ரெட் கார்டு கொடுக்கப்பட்டு மெஸ்சி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் மெஸ்சி மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டதால், அவர் மூன்று சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதித்து, தென் அமெரிக்க கால்பந்து சம்மேளனம் உத்தரவு பிற்பித்துள்ளது. மேலும் இதற்காக மெஸ்சிக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மெஸ்சிக்கு 2022 ஆண்டு நடைபெறும் உலக கோப்பைக்கான தகுதிச்சுற்றின் முதல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.