மெர்சல் திரைப்படத்திற்கு அதிக கட்டணம் திரையரங்குகள் மீது ரசிகர்கள் புகார்!

459

தூத்துக்குடி மாவட்ட திரையரங்குகளில் மெர்சல் திரைப்படத்திற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள மெர்சல் திரைப்படம் தீபாவளி தினமான இன்று ஏராளமான திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் ஆத்தூர் பகுதிகளில் மெர்சல் திரைப்படத்திற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அரசு நிர்ணயித்த கட்டணத்தை காட்டிலும் 10 மடங்கு கட்டணத்தில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது, இந்த கட்டண கொள்ளைக்கு காவல் துறையினரும் உடந்தையாக இருக்கின்றனர் என, ரசிகர்களும் பொதுமக்களும் புகார் தெரிவித்துள்ளனர்.