மெர்சல் படத்தில் இருந்து வசனங்களை நீக்க கூறுவதில் நியாயம் இல்லை-புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி!

331

மெர்சல் படத்தில் இருந்து ஜிஎஸ்டி வரி தொடர்பான வசனத்தை நீக்க சொல்வதில் நியாயம் இல்லை என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். விமர்சனங்களை தாங்கி கொண்டு செயல்படும் பக்குவத்தை பாஜக வளர்த்து கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார்.