மெர்சல் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயார் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது..!

187

மெர்சல் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயார் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தான வசனங்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க மேற்கண்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியது. இதனையடுத்து, மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாக அரசியல்கட்சியினர், திரைப்படத்துறையினர் உள்பட பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் மெர்சல் திரைப்படத்தை தயாரித்த தேனாண்டால் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மெர்சல் திரைப்படத்தின் சர்ச்சைகள் தொடர்பாக பா.ஜ.க மாநில தலைவர்களை சந்தித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அவர்களது எதிர்ப்பு நியாமாகவே உள்ளதால், தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தும் கருத்துக்கள் உள்ள காட்சிகளை நீக்க படக்குழு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.