மெர்சல் படத்துக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு : சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை ..!

272

மெர்சல் படத்துக்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய் நடித்து வெளியாகியுள்ள மெர்சல் திரைப்படத்தில், மத்திய அரசின் ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பிழப்பு தொடர்பான வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இது இந்திய இறையாண்மைக்கு எதிராக உள்ளதாகவும், எனவே படத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தணிக்கை சான்றிதழை திரும்ப பெற வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், விசாரணை இன்று நடைபெறும் என தெரிவித்துள்ளது.