பாலியல் குற்றங்களை தடுக்க மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – மத்திய அமைச்சர் மேனகா காந்தி .

1420

பாலியல் குற்றங்களை தடுக்க மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய அமைச்சர் மேனகா காந்தி வலியுறுத்தி உள்ளார்.
முதலமைச்சர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், பாலியல் குற்ற வழக்குகளில் ஆதாரங்களை சேகரித்தல், அவற்றை பாதுகாக்கும் பிரிவுகளில் பணிபுரியும் போலீசாருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், அந்த வழக்குகளை போலீசார் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் மேனகா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் விசாரணைக்கு குறுக்கே நிற்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார். தடயவியல் ஆய்வகங்களை அமைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உதவிக்கரம் நீட்டும் என்றும், அந்தக் கடிதத்தில் மேனகா காந்தி குறிப்பிட்டுள்ளார்.