குழந்தைகள் நல்வாழ்வு மையங்களை முறையாக பதிவு செய்ய வேண்டும் என குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி உத்தரவு..!

99

நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் நல்வாழ்வு மையங்கள் அனைத்தும் முறையாக பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி உத்தரவிட்டுள்ளார்.

அன்னை தெரசாவால் தொடங்கப்பட்ட ‘மிஷனரிஸ் ஆப் சாரிட்டி’ நிறுவனமானது ஜார்கண்ட் மாநிலத்தில் குழந்தைகள் மையம் நடத்தி வருகிறது. இங்கிருந்து 3 குழந்தைகளை பணத்துக்கு விற்று விட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் நல்வாழ்வு மையங்கள் அனைத்தும் முறையாக பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி உத்தரவிட்டுள்ளார். மேலும் குழந்தைகள் தத்தெடுப்புக்கென தேசிய அளவில் செயல்படும் ‘காரா’ அமைப்பில் அனைத்து மையங்களும் ஒரு மாதத்துக்குள் இணைக்கப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.