180 டிகிரி கோணத்தில் நடக்கும் ஆச்சரிய மனிதன்..!

136

அமெரிக்காவில் 180 டிகிரி கோணத்தில் தனது கால்களை திருப்பிக் கொண்டு நடக்கும் எளாஸ்டிக் மனிதன் உலகளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறார்.

அமெரிக்காவின் மிச்சிகனில் வசிக்கும் மோசஸ் லான்ஹமை எல்லோரும் ‘மிஸ்டர் எளாஸ்டிக்’ என்று அழைக்கிறார்கள். இவரால் தனது கால்களை 180 டிகிரிக்குப் பின்னால் திருப்பி, நடக்க முடிகிறது. அதாவது முட்டியிலிருந்து பாதம் வரை அப்படியே பின்பக்கம் திரும்பிவிடுகிறது. இவருக்கு இப்படி ஓர் அசாதாரணமான ஆற்றல் இருப்பதை, 14 வயதில்தான் கண்டுகொண்டார். கால்களை 180 டிகிரி கோணத்தில் திருப்பும்போது அவருக்குச் சிறிதும் வலி இல்லாமல் இருப்பதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்ததில் இவருக்கு இயற்கையிலேயே இந்தப் பிரச்னை இருப்பதாக தெரிவித்தார். ஆனால் அவர் இதை ஒரு குறைபாடாக கருதாமல் ஆற்றலாகவே நினைக்கிறார். இதன்மூலம் 3 உலக சாதனைகளைப் படைத்துள்ளார். முன்பக்கமாக நடப்பதைவிட கால்களைத் திருப்பிக் கொண்டு பின்பக்கமாக நடப்பது எளிதாக இருப்பதாகவும் மோசஸ் சொல்கிறார்.