ஜி.கே.மூப்பனாரின் 17-வது நினைவு தினம் இன்று கடைபிடிப்பு..!

124

சென்னையில் உள்ள ஜி.கே.மூப்பனாரின் நினைவிடத்தில், ஜி.கே.வாசன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ஜி.கே.மூப்பனாரின் 17-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தின் பின்புறம் அமைந்துள்ள மூப்பனார் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், மூப்பனாரின் மகனும், த.மா.கா. தலைவருமான ஜி.கே.வாசன், நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து முன்னாள் மத்தியமைச்சர் டி.ஆர்.பாலு, முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிங்கன் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மூப்பனாரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.