மேலூரில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்த சம்பவம், அந்த பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

271

மேலூரில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்த சம்பவம், அந்த பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வு பெற்ற வேளாண்மைதுறை அதிகாரியான அலியார் பாட்ஷா, மதுரை மேலூரை சேர்ந்தவர். இந்தநிலையில், பிரசவத்திற்காக மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தனது மகளை பார்க்க வீட்டை பூட்டிவிட்டு பாட்ஷா குடும்பத்தினருடன் சென்றிருந்தார். இதையறிந்த மர்ம நபர்கள் பூட்டிய வீட்டை உடைத்து, பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். வீடுதிரும்பிய பாட்ஷா, பீரோவில் இருந்த நகைகள் திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் புகார் அளித்ததன்பேரில், காவல்துறை துணைகண்காணிப்பாளர் குமாரவேல் விசாரணை மேற்கொண்டார்.
தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேர்த்து விசாரணை நடைபெற்று வருகிறது. பூட்டிய வீட்டின் கதவை உடைத்து, கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.