மேகதாது அணையை நாங்களே கட்டுவோம் – வாட்டாள் நாகராஜ்

99

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் பணியை தொடங்காவிட்டால், அதற்கான பணியை தொடங்குவோம் என்று வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது மற்றும் காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு எதிராக தமிழகம் செயல்பட்டு வருவதாகவும், இதனை கண்டித்து நாளை, கர்நாடக – தமிழக எல்லையான அத்திப்பள்ளியில், முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், கர்நாடக அரசு உடனடியாக மேகதாது அணைக்கான பணிகளை தொடங்க வேண்டும் என்றும் இல்லையேல் தங்களது இயக்கத்தின் சார்பில், சிமெண்ட், மணல், ஜல்லி, செங்கல் ஆகியவற்றைக் கொண்டு அணை கட்டும் பணியை தொடங்கவுள்ளதாகவும் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.