மேகாலயத்தில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் தனிப்பெரும் கட்சி என்ற அந்தஸ்தை அக்கட்சி இழந்துள்ளது.

60 உறுப்பினர்களைக் கொண்ட மேகாலய சட்டப் பேரவைக்கு கடந்த பிப்ரவரியில் தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 21 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்தது. ஆனால் 20 இடங்களில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் கட்சி, பாஜக மற்றும் இதர கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. முதல்வராக அக்கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா உள்ளார். இந்நிலையில், ராணிகோர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ மார்ட்டின் எம்.டாங்கோ, தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். மேலும், மக்களின் விருப்பப்படியே காங்கிரஸில் இருந்தும் விலகுவதாக அறிவித்த அவர், ராணிகோர் தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் 5 முறை எம்எல்ஏவாக தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.