மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் மீண்டும் தீ விபத்து | அடுத்தடுத்த தீ விபத்து சம்பவங்களால் பரபரப்பு ..!

757

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், கட்டுப்பாட்டு அறையில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த இரண்டாம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் வசந்தராயர் மண்டபம் கடும் சேதமடைந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கோயில் சி.சி.டி.வி. கட்டுப்பாட்டு அறையில் நேற்று திடிரென சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதில் கட்டுப்பாட்டு அறையிலிருந்த ஏசி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் எரிந்து சேதமானதாகவும் கூறப்படுகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள தீ விபத்து சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.