கல்லூரி மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவு..!

212

அரசு மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகள் விதித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

அரசு கல்லூரிகளில் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு வகுப்பு நாளை தொடங்குகிறது. இந்நிலையில் மருத்துவக் கல்லூரிகளுக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ வெளியிட்டுள்ள உத்தரவில், கல்லூரிகளுக்கு வரும் மாணவ, மாணவிகள் ஜீன்ஸ் பேன்ட், டி-சர்ட், ஸ்லீவ்லெஸ் மேலாடைகளை அணியக் கூடாது என்று கூறியுள்ளார். மாணவிகள் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற ஆடைகளை மட்டுமே அணிந்து வரவேண்டும் என்றும் லெகிங்ஸ் ஆடையை அணிந்து வரக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

மேலும் மாணவர்கள் பேன்ட், சட்டை அணிந்து இன் செய்து கொண்டும், ஷூ அணிந்தும் வர வேண் டும் என்று கூறியுள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ, மாணவ, மாணவிகள் வகுப்பறையில் செல்போன் உபயோகிக்கக் கூடாது என்றும் கல்லூரிகளில் ராகிங்கைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.