மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் நாளை மறுதினம் முதல் விநியோகம் செய்யப்படுகிறது

344

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் நாளை மறுதினம் முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில் 6 லட்சத்து 11 ஆயிரத்து 539 பேர் தேர்வாகி உள்ளனர். இதில் 3 லட்சத்து 45 ஆயிரத்து 313 மாணவிகளும், 2 லட்சத்து 66 ஆயிரத்து 221 மாணவர்களும் தேர்வாகினர். அதில் மாற்று பாலினத்தை சேர்ந்த 5 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கையில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதமும், சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மீதமுள்ள 15 சதவீத இடங்களும் ஒதுக்கீடு செய்யப்படும் என்று நேற்று அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் நாளை மறுதினம் முதல் விநியோகம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியுடன் இருப்பதாக கூறினார்.