தமிழகத்தில் மருத்துவ படிப்பில் 69% இட ஒதுக்கீடுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு..!

256

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் 69 சதவீத இட ஒதுக்கீடுக்கு எதிரான இடைக்கால மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு 69 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கு வசதியாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு கடந்த 1993 ஆம் ஆண்டு சட்ட முன்வடிவை தாக்கல் செய்து நிறைவேற்றியது. இதற்கான அரசாணை கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இந்த இட ஒதுக்கீட்டால் தங்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கவில்லை என கூறி, சென்னையை சேர்ந்த 2 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாணவிகளின் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அத்துடன் இடஒதுக்கீட்டு எதிரான மூல வழக்கு நவம்பர் மாதத்தில் விசாரிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.