துணை மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடக்கம் : அக்டோபர் 7ஆம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறும் என தகவல்

246

துணை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உட்பட, ஒன்பது துணை மருத்துவப் படிப்புகளுக்கு, சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், இன்று முதல், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று, சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் நடைபெறுகிறது. இதில், 146 பேர் பங்கேற்க உள்ளனர். இந்த படிப்புகளுக்கு, அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 484 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், 5,479 இடங்களும் உள்ளன. இதற்கான தகுதி பட்டியல், அழைப்பு கடிதம் ஆகியவை இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. வரும் அக்டோபர் 7ஆம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.