மருத்துவ சேவையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது – ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

271

100 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ சேவையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

தேசிய மருத்துவர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, 2018 ஆம் ஆண்டின் சிறந்த மருத்துவர்களுக்கான மருத்துவ கவுன்சில் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. மருத்துவ கல்வி பிரிவில் 4 மருத்துவர்களுக்கும், துறை வல்லுநர் பிரிவில் 4 மருத்துவர்களுக்கும், சமூக மருத்துவ சேவை பிரிவில் 3 மருத்துவர்களுக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், 100 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ சேவையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். உலகளவிலான மருத்துவ சேவையில் 17.7 சதவீத பங்கை தமிழகம் வழங்குவதாக கூறிய அவர், கிராமபுறங்களில் அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்கள் சேவையாற்றி வருகின்றனர் என்றார்.