பாலியல் புகாரில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

அண்மையில் பெண்களில் சிலர் தங்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் குறித்து me too ஹேஷ்டேக் மூலம் தெரிவித்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன் பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பற்றிய ரகசியங்களை பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியிட்டு வருவதால் முக்கிய துறைகளில் உள்ள அதிகாரிகள் தூக்கத்தை தொலைத்து கதி கலங்கி போயுள்ளனர். இதில் 40 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த மூத்த பத்திரிக்கையாளரும், மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சருமான எம்.ஜே.அக்பர் மீதும் சில பெண்கள் பாலியல் தொல்லை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

பிரியா ரமணி உட்பட 9 பெண்கள் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர். இந்த பிரச்சனையை தற்போது எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளனர். அக்பரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இதனால் அவருடைய மத்திய அமைச்சர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனிடையே பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறிய புகார் தொடர்பாக எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டுள்ளது.