எம்.சி.ஏ. மற்றும் எம்.பி.ஏ. படிப்பிற்கான கலந்தாய்வு கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் தொடங்கியது.

264

எம்.சி.ஏ. மற்றும் எம்.பி.ஏ. படிப்பிற்கான கலந்தாய்வு கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் தொடங்கியது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் எம்.சி.ஏ, எம்.பி.ஏ. படிப்புகளில் சேர்வதற்கான எழுத்துத்தேர்வு கடந்த ஜுன் மாதம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். இதையடுத்து மாணவர் சேர்க்கைக்காக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் பணி கடந்த ஜுலை 4ம் தேதி தொடங்கி 15ம் தேதிவரை நடைபெற்றது. இதில் எம்.பி.ஏ. படிப்பிற்காக 6 ஆயிரத்து 424 மாணவர்களும், எம்.சி.ஏ. படிப்பிற்காக 2 ஆயிரத்து 191 மாணவர்களும் விண்ணப்பிருந்தனர். இதில் தேர்வுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான கலந்தாய்வு கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரில் நடைபெற்றது. முதல் கட்டமாக எம்.சி.ஏ. படிப்பிற்காக தொடங்கிய கலந்தாய்வில் 5 மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்துகொண்டு கல்லூரிகளை தேர்வு செய்தனர். மேலும் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு அடுத்த மாதம் 2ம் தேதி வரையும், எம்.பி.ஏ. படிப்பிற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 3ம் தேதிமுதல் 14ம் தேதிவரை நடைபெற உள்ளது.