இந்திய வர்த்தக வளர்ச்சிக்கான குழுவின் 4-வது கூட்டம் | தமிழக அரசு சார்பில் அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்பு

86

ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் என்ற அளவில், அடுத்த 5 ஆண்டுகளில் பொருள்களை ஏற்றுமதி செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியில், இந்திய வர்த்தக வளர்ச்சிக்கான குழுவின் நான்காவது கூட்டம், மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் மாநிலத் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் பங்கேற்றுப் பேசினார். அப்போது, சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், ஒவ்வொரு மாவட்ட தொழில் மையங்களிலும் தனிப் பிரிவுகளை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது என்றார்.

தமிழகத்தில் 38 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் செயல்பட்டு வருவதாக கூறிய அமைச்சர் எம்.சி.சம்பத், புதிய சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு ஊக்கம் அளித்து வருவதாகவும் குறிப்பிட்டார். ஏற்றுமதியை இரட்டிப்பாக்க வேண்டுமானால், உள்கட்டமைப்பு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.