புதிய தொழிற் கொள்கை மூலம் தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலமாக உருவெடுத்துள்ளது..!

88

புதிய தொழிற் கொள்கை மூலம் தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலமாக உருவெடுத்துள்ளதாக, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று, தொழில்துறை மற்றும் சிறு குறு தொழில் நிறுவனங்கள் துறை மீதான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய திமுக உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், ராமச்சந்திரன் தமிழகத்தில் உள்ள தொழில் வளர்ச்சியின் நிலை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் எம்.சி.சம்பத், தமிழகத்தில் புதிய தொழிற் கொள்கை மூலம் தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலமாக இருப்பதாகக் கூறினார். மேலும், கடலூர் சிப்காட்டில் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்தார்.