தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்றுடன் முடிவு..!

104

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்றுடன் முடிவடைகிறது.

2018- 2019ஆம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள், கடந்த 10ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தன. தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. மேலும் www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org என்ற தளத்திலும் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பங்களை வழங்கலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் கூறியிருந்தது.

இந்நிலையில் விண்ணப்பங்கள் வாங்குவதற்கு இன்றே கடைசி நாள் என்றும் மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்திருந்தது. விண்ணப்பங்கள் 19-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பவேண்டும் என்றும், தரவரிசை பட்டியல் 28-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.