அகில இந்திய மருத்துவ கலந்தாய்வில் நிரப்பப்படாத 90 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கான சிறப்பு கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது.

302

அகில இந்திய மருத்துவ கலந்தாய்வில் நிரப்பப்படாத 90 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கான சிறப்பு கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது.
அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத 90 எம்.பி.பி.எஸ். இடங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதில் 81 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 9 இடங்கள் கே.கே.நகர் ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியிலும் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான சிறப்பு மருத்துவ கலந்தாய்வு இன்று சென்னை ஓமாந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் காலை 10 மணியளவில் தொடங்குகிறது. இதையடுத்து சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள காலியிடங்களை சேர்த்து மொத்தமுள்ள 139 எம்.பி.பி.எஸ். இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ள 3 பல் மருத்துவ படிப்புகான இடங்கள் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 440 பல் மருத்துவ படிப்புக்கான இடங்கள் ஆகியவற்றுக்கு வருகிற 28 ஆம் தேதி கலந்தாய்வு நடக்கிறது.