அடுத்தாண்டுக்குள் மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்

148

அடுத்தாண்டுக்குள் மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 823 பேருக்கு பணி நியமன ஆணைகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருநெல்வேலி, வேலூர் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது போல், அடுத்தாண்டுக்குள் மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என தெரிவித்தார். மேலும் மேட்டூர் அணையில் இருந்து நீர்வரத்தை பொறுத்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படும் எனவும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.