மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி கடையடைப்பு போராட்டம்

149

மயிலாடுதுறையை தனிமாவட்டமாக அறிவிக்கக் கோரி சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடையடைப்புப் போராட்டம் நடந்து வருகிறது.

தென்காசி, செங்கல்பட்டு ஆகிய இரண்டு புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். விரைவில் 36 ஆவது மாவட்டமாக கும்பகோணம் அறிவிக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தனி மாவட்டம் கேட்டுப்போராடி வரும் மயிலாடுதுறை கோட்டப் பகுதி மக்களுக்கு இந்த அறிவிப்புப் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்காததைக் கண்டித்து நேற்று மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பத்தாயிரத்துக்கும் அதிகமான கடைகள் மூடப்பட்டு போராட்டம் நடந்து வருகிறது.