ரூபாய் நோட்டு அறிவிப்பு முழுக்க முழுக்க அரசியல் ஆதாயத்திற்காக மேற்கொண்ட நடவடிக்கை என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

184

ரூபாய் நோட்டு அறிவிப்பு முழுக்க முழுக்க அரசியல் ஆதாயத்திற்காக மேற்கொண்ட நடவடிக்கை என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் ரூபாய் நோட்டு அறிவுப்புக்கு காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், பா.ஜ.க தலைவர்கள் பகுஜன் சமாஜ் கட்சி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறி வருவதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜவுக்கு முக்கிய சவாலாக பகுஜன் சமாஜ் கட்சி விளங்கும் என கூறிய அவர், ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் பிரதமர் மோடி அவசரம் காட்டியுள்ளார் என்று குற்றஞ்சாட்டினார். இதனால் 90 சதவீத பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளாக தெரிவித்த அவர், இந்த நடவடிக்கையை சரி என நிரூபிக்க பிரதமர் மோடி கண்ணீர்விட்டு மிரட்டி வருகிறார் என்றும் அவர் கூறினார்.