தனியார் விடுதியில் தங்கியிருந்த 10ஆம் வகுப்பு மாணவிகள் 5பேர் மாயமானதால், பரபரப்பு ஏற்பட்டது.

259

தனியார் விடுதியில் தங்கியிருந்த 10ஆம் வகுப்பு மாணவிகள் 5பேர் மாயமானதால், பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் களியல் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவிகளின் வசதிக்காக தங்கும் விடுதி ஒன்றும் இங்குள்ளது. இந்தநிலையில், அங்கு படித்துவரும் 10 ஆம் வகுப்பு மாணவிகள் 5பேர் திடீரென மாயமான சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த விடுதி நிர்வாகிகள் கடையால்மூடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மாணவிகள் 5 பேரும் கேரள மாநிலம் புனலூர் பகுதியிலுள்ள மாணவி ஒருவரின் உறவினர் வீட்டில் தங்கியுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.