மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மே 17 இயக்கத்தினர் கைது கைது!

1135

மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு 2வது நாளாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மே 17 இயக்கத்தினர் கைது கைது செய்யப்பட்டனர்.
நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டதால், விரக்தி அடைந்த அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதற்கு கண்டனம் தெரிவித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் நேற்று போராட்டங்கள் நடைபெற்றன.
2வது நாளாக சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. மயிலாப்பூர் லஸ் கார்னர் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழக அரசு பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.
சிட்டி சென்டர் அருகே புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய அவர்கள், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
தி.நகரில் மே 17 இயக்கம் சார்பில் கண்டன போராட்டம் நடத்தப்பட்டது. பாஜக அலுவலகத்தை முற்றுகையிட அவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மே 17 இயக்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.