ஐரோப்பிய யூனியன் மீது வழக்கு தொடர டிரம்ப் ஆலோசனை..!

492

ஐரோப்பிய யூனியன் மீது வழக்கு தொடருமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆலோசனை கூறியதாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே பிரிட்டன் சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், இவ்விவகாரம் குறித்து அந்நாட்டு பிரதமர் தெரேசா மேவுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த டிரம்ப், ஒன்றியத்திலிருந்து வெளியேறும் செயல் திட்டம் தொடர்பாக, தாம் கூறிய அறிவுரையை பிரிட்டன் பிரதமர் தெரசா மே பின்பற்றவில்லை என தெரிவித்தார்.

இதனால் இருவரது சந்திப்பு குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் லண்டனில் செய்தியாளர்களை சந்தித்த தெரேசா மே, ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது வழக்கு தொடருமாறு டிரம்ப் ஆலோசனை கூறியதாகவும், பிரிட்டன் வெளியேற கூடாது என்று அவர் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.