ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்திக் சிதம்பரத்திற்கு எதிராக சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்..!

199

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்திற்கு எதிராக சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது, ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் 3500 கோடியை முதலீடு செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சட்டவிரோதமாக அளிக்கப்பட்ட இந்த அனுமதி குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ப.சிதம்பரம் , கார்த்திக் சிதம்பரம் உள்பட 17 பேர் மீது டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓ.பி.ஷைனி குற்றப்பத்திரிக்கை மீதான விசாரணை அக்டோபர் 1ம் தேதி நடைபெறும் என கூறி வழக்கை அதே நாளுக்கு ஒத்திவைத்தார். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட 17 பேரில் 5 பேர் அரசு அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.