தவறான தேர்தல் செலவு கணக்கு தாக்கல் | ம.பி. அமைச்சர் 3 ஆண்டுகளுக்குத் தகுதி நீக்கம்

251

தவறான தேர்தல் செலவுக் கணக்குத் தாக்கல் செய்ததாக மத்தியப் பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பாஜகவைச் சேர்ந்த நரோட்டம் மிஸ்ரா மத்தியப் பிரதேச மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். இவர் கடந்த 2008-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது தவறான தேர்தல் செலவுக் கணக்குகளைத் தாக்கல் செய்ததாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜேந்திர பார்தி என்பவர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது. இந்த உத்தரவு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், மிஸ்ரா போட்டியிட்டு வெற்றிப் பெற்ற தாதியா தொகுதி காலியாக உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனிடையே, தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மத்தியப் பிரதேச உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.