நெடுவாசல் மக்களின் அச்சங்களை தீர்த்த பின்னரே ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

161

நெடுவாசல் மக்களின் அச்சங்களை தீர்த்த பின்னரே ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது.
இது தொடர்பாக பெட்ரோலிய துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பான மக்களின் சந்தேகங்களை மாநல அரசு போக்கிய பின்னரே திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என விளக்கம் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தால், 37 ஆயிரத்து, 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும்,நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, ஹைட்ரோ கார்பன் மூலம் அரசுக்கு 46 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.