ஆதார் அட்டையை பதிவு செய்ய ஜுன் 30 தேதிக்கு மேல் நீட்டிக்க முடியாது : மத்திய அரசு

334

ஆதார் அட்டையை கட்டாயமாக்கும் திட்டத்துக்கான கெடுவை ஜூன் 30-ம் தேதிக்கு மேல் நீட்டிக்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள், அரசின் சலுகைகளைப் பெறுவதற்காக ஆதார் அட்டைக் கட்டாயம் வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனைப் பெற ஜுன் 30-ம் தேதி கடைசி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென்று உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு விசாரணையில், மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, சமூக நலத் திட்டங்களுக்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட வேண்டும். அப்போது தான் அரசின் பலன்கள் தவறானவர்களின் கைகளுக்கு சென்று சேர்வது தவிர்க்கப்படும் என்று தெரிவித்தார். எனவே ஆதார் அட்டையை கட்டாயமாக்கும் திட்டத்துக்கான கெடுவை ஜூன் 30-ம் தேதிக்கு மேல் நீட்டிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.