மத்திய அரசு சார்பில் இன்று காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

307

மத்திய அரசு சார்பில் இன்று காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளைத் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி வியாழக்கிழமை வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் ஜி.எஸ்.டி. விவகாரம், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான எல்லைப் பிரச்சனை, சீனாவுடனான போர்ச்சூழல், மாட்டுக்கறித் தடைச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில், மழைக்காலக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்தும், அனைத்துக் கட்சிகளும் நடந்துக் கொள்ள வேண்டிய முறைகள் குறித்தும் விவாதிப்பதற்காக மத்திய அரசின் சார்பாக இன்று காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. இதேபோல், இன்று மாலை 7 மணிக்கு மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் தனியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.