தமிழக அரசின் அனைத்து பிரச்சனைகளிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.

190

தமிழக அரசின் அனைத்து பிரச்சனைகளிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காலநிலை மாற்றம் மற்றும் அதன் விளைவுகள் குறித்த தேசிய கடலோர நிலை திட்ட மைய கட்டடத்தை மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு அனைத்து வகையிலும் உதவி செய்யும் என்று கூறினார். சென்னையில் இந்த ஆண்டு சர்வதேச அறிவியல் விழா நடத்தப்பட இருப்பதை குறிப்பிட்ட அவர், இந்த விழாவில் 10 ஆயிரம் விஞ்ஞானிகள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.