வழக்கத்தைவிட வெப்பநிலை அதிகமாக இருக்கும் | முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

326

கோடை காலத்தில் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால், போர்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
வழக்கத்தை விட 5 முதல் 6 டிகிரிவரை வெப்பம் உயரும் என்றும், சில இடங்களில் வெப்ப அளவு 110 டிகிரியை தாண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும், நண்பகல் வேளையில் முதியவர்கள் வெளியில் நடமாடுவதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும் என்றும், வெப்பம் அதிகமாக இருக்கும்போது பள்ளியில் இருந்து மாணவர்கள் வெளியேறக் கூடாது என்பதை நிர்வாகிகள் அறிவுறுத்த வேண்டும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்குமாறு, மத்திய புவி அறிவியல் அமைச்சகம் சுற்றிக்கை அனுப்பியுள்ளது.