மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் பற்றிய சுயமதிப்பீட்டு அறிக்கையை ஆய்வு செய்தபின் அமைச்சரவையை மாற்றம் செய்ய பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.

239

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் வரும் 29 ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் தேதி இறுதி செய்யப்பட உள்ளது. இதனையடுத்து, மழைக்கால கூட்டத் தொடர் அடுத்த மாதம் 18ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெறலாம் என மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்குள் மத்திய அமைச்சரவையை மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ள பிரதமர் மோடி, அதற்காக தங்கள் துறைகளின் செயல்பாடுகள் பற்றிய சுயமதிப்பீட்டு அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, வரும் 30ஆம் தேதி மத்திய அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர்களின் சுயமதிப்பீட்டு அறிக்கையை ஆய்வு செய்யும் பிரதமர் மோடி, அமைச்சர்களின் செயல்திறனுக்கு ஏற்ப அமைச்சரவையில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளார். வரும் சட்டசபை தேர்தல்களை கருத்தில்கொண்டு, புதிய மத்திய அமைச்சரவையில் உத்தரபிரதேசம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.