இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியாவும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றின. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா- இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது.