உலகின் நம்பர் ஒன் குத்துச்சண்டை வீராங்கனையாக மேரி கோம் முதலிடம் பிடித்து சாதனை..!

105

இந்திய நட்சத்திர வீராங்கனை மேரி கோம் உலகின் நம்பர் ஒன் குத்துச்சண்டை வீராங்கனையாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை மேரி கோம் 48 கிலோ எடைப்பிரிவில் 6-ஆவது முறையாக தங்கப் பதக்கம் வென்று சாம்பியன் ஆனார். உலகப் போட்டிகளில் அவர் பெறும் 7-ஆவது பதக்கம் இதுவாகும். மேலும், இதன் மூலம் 6 தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையையும் மேரிகோம் படைத்தார்.

இதன்மூலம், தனக்கு இணையாக பதக்கங்களை வென்ற அயர்லாந்து வீராங்கனை கேத்தி டெய்லரை விட, கூடுதலாக ஒரு பதக்கம் வென்று 7 பதக்கங்களுடன் அதிக பதக்கங்கள் வென்ற வீராங்கனை என்ற புதிய சாதனையை மேரிகோம் படைத்துள்ளார். இந்நிலையில், வெளியிடப்பட்டுள்ள சர்வதேசக் குத்துச் சண்டைத் தரவரிசை பட்டியலில் மேரிகோம் முதலிடம் பிடித்துள்ளார் . இதையடுத்து சமூகவலைத்தளங்களில் அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.