மருத்துவ படிப்பு பொது நுழைவுத் தேர்வில் 4 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

412

மருத்துவ படிப்பு பொது நுழைவுத் தேர்வில் 4 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு ஒரே மருத்துவ நுழைவுத்தேர்வு நடத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஏப்ரல் மாதம் நுழைவுத்தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு முதல் கட்டமாக மே 1ம் தேதி நாடு முழுவதும் 52 நகரங்களில் ஆயிரத்து 40 மையங்களில் நடைபெற்றது. 2ம் கட்டமாக ஜூலை 24ம் தேதி 56 நகரங்களில் 739 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு முடிவுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 4 லட்சத்து 9 ஆயிரத்து 477 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டின்கீழ் கலந்தாய்வில் கலந்துகொள்ள 19 ஆயிரத்து 325 பேர் தகுதி பெற்றுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. 685 மதிப்பெண்கள் பெற்ற குஜராத் மாணவர் ஹெட் ஷா முதலிடம் பிடித்துள்ளார். தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, அகில இந்திய அளவில் மருத்துவ கலந்தாய்வு, ஆன்லைன் மூலம் விரைவில் நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.