மணக்கோலத்தில் வாக்களித்த மணமக்கள்..!

95

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மணக்கோலத்தில் வந்த மணக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அப்பைநாயக்கர் பட்டியை சேர்ந்த சுபாஷ் மற்றும் பிரியா இருவருக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது. இதனையடத்து, மணக்கோலத்தில் வாக்குச்சாவடிக்கு வந்த அவர்கள் வரிசையில் நின்று வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமை ஆற்றினர். இதேபோன்று, செங்குன்றம் அடுத்த புழல் பகுதியை சேர்ந்த ராமு- தீபா இருவருக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து சூரப்பட்டு 24-வது வார்டு வாக்குச் சாவடிக்கு மணக்கோலத்தில் வந்த அவர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். கர்நாடக மாநிலம் மங்களூருவில் சீமந்தம் முடிந்த நிறைமாத கர்ப்பிணிப் பெண் சீமந்த உடை அலங்காரத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.