மர்ம காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. திருவள்ளூரில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.

194

தமிழக அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கையால் திருவள்ளூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் கட்டுக்குள் இருப்பதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
திருத்தணி மற்றும் காவேரிராஜபுரம் பஞ்சாயத்தில், மர்ம காய்ச்சல் காரணமாக 4 குழந்தைகள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, அப்பகுதிகளில் 20க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சர் அமைச்சர் விஜய பாஸ்கர், அங்குள்ள அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டதோடு, பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், நிலவேம்பு கசாயம் அனைத்து கிராமங்களிலும் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதால், மர்ம காய்ச்சல் கட்டுக்குள் இருப்பதாக அவர் கூறினார்.