பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த சேலம் வீரர் மாரியப்பனுக்கு இந்திய அஞ்சல் துறை சார்பில் தபால் தலை வெளியிடப்பட்டது.

249

பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த சேலம் வீரர் மாரியப்பனுக்கு இந்திய அஞ்சல் துறை சார்பில் தபால் தலை வெளியிடப்பட்டது.
பாராலிமிக் போட்டியில் தங்கம் வென்று வீடு திரும்பிய மாரியப்பனுக்கு தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் பெரிய வடகமபட்டியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் படித்த பள்ளியில் தபால்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாரியப்பனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாரியப்பன் உருவப்படம் பொறிக்கப்பட்ட தபால் தலை இந்திய தபால் துறை சார்பில் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் ஆறுமுகம், மேற்கு கோட்ட கண்காணிப்பாளர் பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் தாமக தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்த 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை அக்கட்சி நிர்வாகிகள் மாரியப்பனிடம் வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தங்கமகன் மாரியப்பன், தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.