ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று சென்னை மெரினா கடற்கரையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய போராட்டம் உலகையே தன் பக்கம் ஈர்த்துள்ளது. இரவு பகல் பாராமல் 100 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த
வரும் போராட்டம் வரலாறு படைத்து வருகிறது. 5வது நாளான இன்று 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மெரினாவில் குவிந்து ஜல்லிக்கட்டு ஆதரவாக போராடி வருகின்றனர். அவர்களுக்கு துணை நிற்க சென்னை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால், மெரினா கடற்கரை எழுச்சிக் கோலம் பூண்டுள்ளது. இதனிடையே, ஜல்லிக்கட்டு அவசர சட்டம் கொண்டு வந்துள்ள நிலையில், நிரந்த தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று இளைஞர்களும், மாணவர்களும் தெரிவித்துள்ளனர். இன்று மாலை இருள் சூழ்ந்த பிறகு, செல்போன் டார்ச் வெளிச்சத்தில் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.