தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

110

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக குடியரசு தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள அவர், ஜல்லிக்கட்டின் போது காளைகளின் துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதை சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆனால் இதுபோன்ற எந்த ஒரு துன்புறுத்தலும் காளைகள் மீது நடத்தப்படுவதை தான் பார்த்தது கிடையாது என்று கட்ஜூ தெரிவித்துள்ளார்.
எனவே, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
போட்டியின் போது மாடுகள் மீது தழுவிச் செல்லும் வீரர்கள் சில அடிகளில் மீண்டும் இறங்கி விடுவதை குறிப்பிட்டுள்ளார்.
ஜல்லிக்கட்டை நேசிக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதியாக தான் இந்த வேண்டுகோளை விடுப்பதாக கூறியுள்ள மார்கண்டேய கட்ஜூ, போட்டிக்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.