மார்ச் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

395

மார்ச் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, மார்ச் முதல் வாரம் தென் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால், வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.