மாறன் சகோதரர்கள் ஜுன் 6-ம் தேதி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று சிபிஐ நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

269

மாறன் சகோதரர்கள் ஜுன் 6-ம் தேதி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று சிபிஐ நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புப் பெற்றதில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. சட்ட விரோதமாக இணைப்புப் பெற்றதில் 1.78 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக கலாநிதி மாறன், தயாநிதி மாறன் இருவர் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதுதொடர்பாக இருவரும் இன்று சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நேரில ஆஜராகி குற்றப்பத்திரிகை நகல்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால், அவர்கள் இருவரும் இன்று நேரில் ஆஜராகவில்லை. எனவே, இந்த வழக்கை வரும் ஜுன் 6-ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிமன்றம், அன்றைய தினம் இரண்டுப் பேரும் நிச்சயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.